வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2024-09-15 18:09 GMT

சேலம் 41-வது வார்டில் குமரன் தெரு-1, மடம் தெரு, குமரன் தெரு-2, அண்ணா தெரு போன்ற தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலையில் ஒரு வேகத்தடைகள் கூட இல்ைல. இந்த சாலையில் சாகசம் செய்யும் வகையில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்கின்றனர். இதனால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையில் இரண்டு, மூன்று வேகத்தடைகளை அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.

- சிவகாமி, சேலம்.

மேலும் செய்திகள்