எருமப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள நாமக்கல்-துறையூர் சாலையில் அய்யர்மேடு பகுதியில் ஆபத்தான முறையில் குழிகள் உள்ளன. இதில் அடிக்கடி சாலையில் செல்பவர்கள் கீழே விழுந்து விடுகின்றனர். இது போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு குழி இருப்பது தெரியவில்லை. இதனால் அடிக்கடி சாலை விபத்துகளும் நடக்கிறது. எனவே பல்லாங்குழி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜ்குமார், எருமப்பட்டி