தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடை மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்துவதற்கான இந்த நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பஸ்களுக்கு காத்திருக்கும் போது நிற்பதற்குகூட இடம் இல்லாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நடைபாதையில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், தர்மபுரி.