பல்லாங்குழி சாலை

Update: 2024-09-08 20:01 GMT

சேலம் இரும்பாலை ரோடு சித்தனூர் காட்டுவளவில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்களில் வரும்போது சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்ததால் சாலையில் மண் போட்டு மூடிவிடுகின்றனர். மழைக்காலங்களில் மண் கரைந்து மீண்டும் சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இங்கு தார்சாலை அமைத்து தரவேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இதனையும் அதிகாரிகள் சரி செய்து தர வேண்டும்.

-சுரேஷ்குமார், சேலம்.

மேலும் செய்திகள்