நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த பகுதியில் இருந்து சர்வீஸ் சாலைக்கு செல்லும் பாதை மண் சாலையாக இருப்பதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் சாலையை சரி செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?
-கஜேந்திரன், பரமத்தி.