தர்மபுரி மாவட்டம், கும்மனூர் ஊராட்சி நமாண்டஅள்ளியில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் இன மக்களுக்காக புதிய காலனி அமைக்கப்பட்டு அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் வசதிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்மனூர் ஊராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த கான்கிரீட் சாலையை உடைத்து குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை தோண்டிய குழி மூடப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சாக்கடை தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தோண்டப்பட்ட சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-கேசவன், தர்மபுரி.