பர்கூர் பேரூராட்சி 12-வது வார்டு உட்பட்ட துரைஸ் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. துரைஸ் நகரில் இருந்து பர்கூருக்கு வரும் சாலையின் இரு புறங்களிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இப்பகுதிகளை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் நடந்தும், மோட்டார் சைக்கிள்களிலும் இந்த வழியே தான் வருகின்றனர். இந்த புதர்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் உள்ளதால் அச்சத்துடனே பொதுமக்கள் வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாத காரணத்தினால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தாமதம் இன்றி சாலையின் இரு புறங்களிலும் உள்ள புதர்களை அகற்றியும் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
-தருண், பர்கூர்.