கோவை ஒண்டிபுதூரில் இருந்து செல்லும் இருகூர் சாலையில் இட்டேரி வீதி, தாகூர் நகர், எஸ்.எம்.எஸ். லே அவுட், கோபால் நகர், கிருஷ்ணன் நாயுடு வீதி, ஜல்லிக்கட்டு வீதி, செந்தில் ஜனதா நகர் உள்ளிட்ட இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பயன்படுத்த முடியாத அளவிற்கு படுமோசமாக உள்ள சாலைகளில்தான் அங்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக செந்தில் ஜனதா நகரில் தரமற்ற முறையில் சாலை சீரமைக்கப்படுகிறது. இதனால் விரைவில் பழுதடைந்து விடும். எனவே பொதுமக்களின் அவதி தீர சாலைகளை முறையாக சீரமைக்க ஆவண செய்ய வேண்டும்.