திருப்பூர் கோவில் வழி முதல் பலவஞ்சிபாளையம் வரை செல்லும் தார்ச்சாலை போட்ட 2 மாதங்களில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு தோண்டி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இந்த சாலை பல்லடம்-தாராபுரம் சாலையை இணைப்பதால் உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.