தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் பேரூராட்சி பில்பருத்தி புத்தர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் வழியாக பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, தாளநத்தம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். முக்கிய வழித்தடத்தை இணைக்கும் இந்த சாலை சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஜல்லிகற்கள் பெயர்ந்து சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
-தங்கராஜ், பாப்பிரெட்டிப்பட்டி.