விபத்து அபாயம்

Update: 2024-06-02 17:19 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் சமீபகாலமாக கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தொழிலாளிகள் வாகனங்களில் விதிமுறைகளை மீறி அதிக நீளத்திற்கு கம்பிகளை எந்தவித பாதுகாப்பும் இன்றி எடுத்து செல்கின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் கம்பிகளில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே அவ்வாறு உரிய பாதுகாப்பு இன்றி கம்பிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனி, ஏரியூர்.

மேலும் செய்திகள்