தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி கிழக்கு கரை கால்வாய் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பாலத்தின் வழியாக எடப்பாடியில் இருந்து குமாரபாளையம், ஈரோடு வரை தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்பட்ட தற்காலிக சாலையின் நடுவே தென்னை மரம் மற்றும் பிற மரங்கள் உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் மரங்கள் இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.