குண்டும், குழியுமான சாலை

Update: 2024-03-31 11:03 GMT

பந்தலூர் அருகே பொன்னானியில் இருந்து மாங்கம்வயல் பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. மழை பெய்தால் அந்த சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. தற்போது வெயில் அடித்து வருவதால், அதை பயன்படுத்தி சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்

சாலை பழுது