பழுதான சாலைகள்

Update: 2024-03-10 17:40 GMT

சூளகிரியில் உத்தனப்பள்ளி செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது. குறிப்பாக சூளகிரியில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் பாலத்தையொட்டி செல்ல கூடிய சாலை முழுவதும் பெயர்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக லாரிகள் அதிகமாக செல்வதால் சாலை முழுவதும் பெயர்ந்து ஜல்லிகற்களாக கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, சூளகிரி.

மேலும் செய்திகள்