அறிவிப்பு இல்லாத வேகத்தடைகள்

Update: 2024-02-25 16:23 GMT

மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூர் ஒன்றியம், அ.புதுப்பட்டியில் இருந்து அழகாபுரி, கோவிலூர், வழியாக கல்வேலிபட்டி செல்லும் சாலையில்  புதிதாக இருவழி தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் 22 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இதில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், வேகத்தடை குறியீடுகள் மற்றும் இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள் இல்லை.. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விபத்தை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயராமன், அழகாபுரி.

மேலும் செய்திகள்