குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-24 16:24 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மூக்கனஅள்ளி கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தொடர்ந்து புதிய சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்