அரக்கோணத்தை தடுத்த தணிகை போளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சக்திநகரில் உள்ள 40 அடி அகலம் கொண்ட ரோடு பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.
மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வாகனங்களில் செல்வோர் சேற்றில் சறுக்கி விழுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சக்திநகர் தணிகை போளூர்.