ஜோலார்பேட்டை ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே ரெயில் பயணிகள் செல்லும் சாலையில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தைச் சரியாக மூடப்படாமலும், பணிகள் முடியாமலும் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் ரெயில் பயணிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலையின் குறுக்கே கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.ராஜசேகர், சந்தைக்கோடியூர்.