ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை எதிரே மேம்பாலப் பணிகள் நடப்பதால், தற்காலிக சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ்குமார், கன்னிகாபுரம்.