சிறுபாலம் சேதம்

Update: 2024-12-01 20:35 GMT

பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட காசிகார தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் வழியில் உள்ள சிறு பாலம் சில மாதங்களாக உடைந்துள்ளது. அந்த பாலத்தின் வழியாக பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கல்யாணசுந்தரம், பனப்பாக்கம்.

மேலும் செய்திகள்