காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரிக்கரை சாலை வழியாக பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி ஆகிய ஊர்களுக்கு மக்கள் சென்று வருகிறார்கள். ஏரிக்கரை சாலையை பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பயன்படுத்துகிறார்கள். அந்தச் சாலை பழுதடைந்துள்ளதால் நடந்து, சைக்கிளில் வரும் மாணவ-மாணவிகள், முதியோர், பெண்கள் அவதிப்படுகின்றனர். ஏரிக்கரை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தீனா, புதுப்பட்டு.