உள்வாங்கிய சாலை

Update: 2025-07-20 17:28 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் கோர்ட்டு அருகில், மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகம் செல்லும் 4- வது மெயின் ரோடு உள்ளது. கோர்ட்டு மற்றும் ஆவின் பால் நிறுவனத்துக்கு இடையே உள்ள ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு இரண்டு இடங்களில் சாலை உள்வாங்கி உள்ளது. ஏற்கனவே ஒருமுறை இந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டது. அந்த இடத்தில் ஜல்லிக்கற்கள் போட்டு மூடினர். தற்போது மீண்டும் இதே இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தற்காலிகமாக அந்த இடத்தில் தடுப்புகளை வைத்து எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளங்களை முறையாக மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா?

-சக்கரபாணி, வேலூர்.

மேலும் செய்திகள்