சாலையோரம் மணல் குவியல்

Update: 2025-01-19 19:59 GMT

கிருஷ்ணகிரி-வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மணல் குவியல் காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். மணலில் கிடக்கும் ஆணி, குண்டூசி போன்றவற்றால் வாகன டயர்கள் பஞ்சராகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், வேலூர்.

மேலும் செய்திகள்