பாதியில் நிற்கும் ரெயில்வே மேம்பால பணி

Update: 2022-08-26 16:04 GMT

திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளிக்கு செல்லும் சாலையில் சோமநாயக்கன்பட்டி கிராமத்தில் ரெயில்வே கேட் உள்ளது. ஜோலார்பேட்டை-பெங்களூரு மார்க்கமாக 10-க்கும் மேற்பட்ட ரெயில்களும், சரக்கு ரெயில்களும் அடிக்கடி செல்கின்றன. இதனால் சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அடிக்கடி மூடி, திறக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. இதற்காக ரெயில்வே மேம்பாலம் அமைக்க ெரயில்வே கேட்டில் இருபுறங்களிலும் பில்லர் மட்டும் எழுப்பப்பட்டு அப்படியே காட்சி பொருளாக உள்ளது. அதன் பிறகு பணி நடக்கவே இல்லை. பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.சுரேஷ், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்