போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக்குவியல்

Update: 2023-08-09 17:53 GMT

ஏலகிரிமலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளை ரசித்து சுற்றுலா பயணிகள் வாகனத்தில் செல்கின்றனர். கொண்டை ஊசி வளைவுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் குவியல் சாலையோரம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள ஜல்லிக்கற்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் ஓரமாக ஒதுக்கி வைக்க வேண்டும்.

-ரவிக்குமார், நிலாவூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது