ஆரணி-வந்தவாசி சாலையில் திருமணி மற்றும் ஆகாரம் கிராமத்துக்கு இடையே ஆகாரம், நடுப்பட்டு, கோணையூர், குடிசைக்கரை ஆகிய கிராமங்களை இணைக்கும் 1½ கிலோமீட்டர் தூரமுள்ள தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அந்தச் சாலை தற்போது ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலைபோல் காட்சி அளிக்கிறது. சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்துத்தர வேண்டும்.
-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.