வேலூர் சத்துவாச்சாரி சவுத் அவென்யூ சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி எதிரே சாலையோரம் பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தால் இரவில் நடந்து செல்லும் பொதுமக்களும், அதிகாலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட ஏற்பாடு செய்ய வேண்டும்.
-கந்தசாமி, வேலூர்.