தென்கரும்பலூர் பகுதியில் இருந்து தண்டராம்பட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையின் குறுக்கே பெரிய ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டு, அந்த வழியாக பொதுமக்கள், விவசாயிகள் சென்று வந்தனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தரைப்பாலம் முழுவதும் சேதம் ஏற்பட்டது. சேதமான தரைப்பாலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும்.
-சிவக்குமார், தென்கரும்பலூர்.