சோளிங்கரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் இருந்து கட்டாரிக்குப்பம் வரை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஜல்லி சாலை தற்போது சேதமடைந்துள்ளது. அந்தச் சாலை வழியாக நந்தி மங்கலம் ஆதிதிராவிடர் குடியிருப்பு, ராமபுரம், கட்டாரிக்குப்பம் பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை, கல்வி, மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக சென்று வருகிறார்கள். சேதமடைந்த ஜல்லிசாலையை தார்சாலையாக மாற்றி அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராஜ், சோளிங்கர்.