திருவண்ணாமலை மாவட்டம் மகமாயிதிருமணி கிராம தேவதையான மணியாத்தாள் அம்மன் கோவிலுக்கு ஊருணி பொங்கல் வைக்க பக்தர்கள் கழனி வரப்பு வழியாக செல்ல சிரமமாக உள்ளது. அரை பர்லாங் தூரம் கோவில் வரை மாந்தாங்கல் இணைப்பு மண் சாலையை அமைத்துக் கொடுத்தால் பக்தர்கள், கிராம மக்களுக்கு வசதியாக இருக்கும். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பவானி, மகமாயிதிருமணி.