குண்டும் குழியுமான சாலைகள்

Update: 2024-07-28 20:44 GMT

அரக்கோணம் தலைமை தபால் அலுவலக தெரு வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். அந்தச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதேபோல் அசோக் நகர் பகுதியில் உள்ள ரத்தன்சந்த் நகர் பிரதான தெரு சாலையும் சேதமடைந்து, ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி குட்டையாக காட்சியளிக்கிறது. பழுதடைந்த சாலைகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-தர்மராஜ், அரக்கோணம்.

மேலும் செய்திகள்