வாலாஜா மார்க்கெட் முதல் அம்மூர் வரையிலும், பஸ் நிலைய நுழைவு வாயில் முதல் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையிலும் தேசிய நெடுஞ்சாலைகள் மேடு, பள்ளமுமாக உள்ளது. இதனால் ஆட்டோக்களில் செல்லும் கர்ப்பிணிகள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். 2 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுதாகர், வாலாஜா.