உடைந்த சிமெண்டு சிலாப்

Update: 2025-03-02 19:52 GMT

வேலூர் கோட்டை எதிரே உள்ள சாரதி மாளிகை முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து மேற்பகுதியில் மணல் மூடி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சரியாக கழிவுநீர் செல்வதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அசோக்குமார், வேலூர்.

மேலும் செய்திகள்

சாலை சேதம்