வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 12-வது வார்டு அம்மா பூங்கா அருகில் வெங்கடேஸ்வரா நகர், முதல் தெரு நுழையும் இடத்தில் சிறுபாலமும், பேங்க் நகர் 2-வது தெரு, ஜெ.பி.பில்டர்ஸ் காலனி முதல் தெரு, கோபாலபுரம் 11-வது தெரு என வார்டு 12-ல் உள்ள பல்வேறு சிறு பாலங்களும் சேதம் அடைந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த சிறு பாலங்களை சீர் செய்து காரைகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும்.
-மு.ராமு, வேலூர்.