மோசமான சாலை

Update: 2025-05-25 20:11 GMT

திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் ஒன்றியம் மாதலம்பாடி கிராமத்தில் ஏரிக்கரையோரம் மதுரா கணேசபுரம்-கூத்தலவாடி செல்லும் தார் சாலை பழுதடைந்து, மிக மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலையில் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ செல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும்.

-என்.சின்னத்துரை, மாதலம்பாடி. 

மேலும் செய்திகள்

சாலை பழுது