ராட்சத பள்ளங்களால் விபத்து

Update: 2024-12-01 20:29 GMT

ஆற்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக அருகே பக்க வாட்டில் வாகனப் போக்குவரத்துக்காக தார் சாலை போடப்பட்டுள்ளது. அந்தத் தார் சாலை தேசிய நெடுஞ்சாலையோடு இணையும் இடத்தில் 4 ராட்சத பள்ளங்கள் உள்ளன. அதில் மழைநீர் தேங்கி இருப்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் சென்று விபத்துகளில் சிக்குகின்றன. அந்த ராட்சத பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெத்தனசாமி, ஆற்காடு.

மேலும் செய்திகள்