ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் வண்ணாரப்பேட்டை தெருவில் 6 மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கும் பணி ஊராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டது. அந்தப் பணியைத் தொடங்கி ஜல்லி கற்கள் பரப்பப்பட்ட நிலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி முழுமைப் பெறாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த சாலை வழியாக செல்ல சிரமப்படுகிறார்கள். சாலையில் புல், பூண்டுகள் வளர்ந்து விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி சிமெண்டு சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனலட்சுமி, பாணாவரம்.