திருப்பத்தூர் டவுன் 12-வது வார்டு தண்டபாணி கோவில் அருகே பல்லாயிரம் ரூபாய் செலவில் 6 மாதத்துக்கு முன்பு புதிதாக சிறிய பாலம் கட்டப்பட்டது. அது சரிவர கட்டப்படாதால் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டும், உடைந்து விழும் நிலையிலும் உள்ளது. தற்போது மண்ணை கொட்டி மூடி மறைத்துள்ளனர். இதுபற்றி பலமுறை நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தை சரி செய்து தர வேண்டும். மேலும் அப்பகுதியில் போடப்பட்ட புதிய தார் சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.அசோக், திருப்பத்தூர்.