திருப்பத்தூர் அருகே பெரியகண்ணாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து கிழக்கு பதனவாடிக்கு செல்லும் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை, சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தசாமி, பெரியகண்ணாலப்பட்டி.