சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-16 15:13 GMT


நாகை மாவட்டத்தில் பாலையூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஆழியூர், பெருங்கட மன்னூர் ஆகிய ஊருக்கு செல்வதற்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் சாலை மிகவும் மோசமாக குண்டும்,குழியுமாக உள்ளது.. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே மழை காலத்திற்கு முன்பாக இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

பொதுமக்கள், பாலையூர்.

மேலும் செய்திகள்