நாகை மாவட்டம் திருமருகல் ஓன்றியம் ராராந்திமங்கலம் நிர்மலா நகர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், நிர்மலா நகர்.