குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-23 14:39 GMT

மன்னார்குடி அருகே மதுக்கூர் ரோட்டிலிருந்து உள்ளிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக உள்ளிக்கோட்டை கடை தெரு வரை சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,உள்ளிக்கோட்டை

மேலும் செய்திகள்