நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் கோம்புபள்ளம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் பணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி பாலம் பகுதியில் பாதுகாப்பான சிறுவழி பாதை தற்காலிகமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், குமாரபாளையம், நாமக்கல்.