நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொட்டாரக்குடியிலிருந்து நல்லுக்குடி வரை திருவாரூர் இணைப்பு சாலை உள்ளது. இந்த நிலையில் சாலை சேதம் அடைந்து குண்டு, குழியமாக உள்ளது. மழை காலங்களில் சேறும், சகதிமாய் மாறி விடுகிறது.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்.