கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக டிராக்டர் மூலம் குளத்தில் களிமண்ணை வெட்டி எடுத்து களிமண் ஏற்றிச் செல்கின்றனர்.டிராக்டரில் களிமண் ஏற்றிச் செல்லும் போது , களிமண் வடபாதிமங்கலம் சாலையில் சிதறுகிறது.. இதனால், சாலை முழுவதும் களிமண் திட்டு திட்டாக உள்ளன. மேலும், களிமண் காய்ந்து புழுதி வீசுவதால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் களிமண் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்