சேதமடைந்த சாலையால் விபத்து

Update: 2022-08-20 16:39 GMT

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலை திருமலைப்பட்டி பிரிவு பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் சேதமாகி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக 3 பகுதிகளில் இருந்து வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும்போது தடுமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே விபத்துகள் நடக்கும் முன்பு வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதம் அடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்