புதிய சாலையின் அவலம்

Update: 2022-08-20 14:42 GMT


திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் ஆலத்தூர் முதல் கிள்ளியூர் வரை செல்லும் சாலை சமீபத்தில் தான் புதிதாக போடப்பட்டது. அந்த சாலையின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. லாரிகளில் மண் எடுத்து செல்வதால் சாலை முழுவதும் களிமண் விழுந்து சேராக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்னறனர். பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை களிமண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமமக்கள் கிள்ளியூர்

மேலும் செய்திகள்