திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு வளாகம் அமைந்துள்ளது. இங்கு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், சரக துணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்