குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-19 16:59 GMT

நாமக்கல் மாவட்டம் நல்லூர் ஊராட்சி செக்கார தெரு வழியாக செல்லும் தார்சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தற்போது பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த தார்சாலையை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சையத் அஸ்லாம், நல்லூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்