நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அதிக போக்குவரத்து நிறைந்த நாமக்கல் சாலையில் அரசு மாதிரி மகளிர் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். காலை, மாலை வேளைகளில் மாணவிகள் அதிகளவில் சாலையில் நடந்து செல்வதை காணமுடிகிறது. ஆனால் பள்ளி முன் வேகத்தடை இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மாணவிகளின் நலன்கருதி பள்ளிக்கூடம் முன் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நவலடி, மோகனூர்